ETV Bharat / state

போலி கால்நடை மருந்தகம் - சீல் வைத்த கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள்! - தர்மபுரி போலி கால்நடை மருந்தகம்

தருமபுரி: போலி கால்நடை மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த மருந்தகத்திற்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் சீல் வைத்தனர்.

Veterinary Pharmacy seal
Veterinary Pharmacy seal
author img

By

Published : Nov 3, 2020, 8:50 PM IST

தருமபுரி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்ட சிலர் மருத்துவர்கள் என கூறி மருந்தகம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதனடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மருத்துவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் தருமபுரி சோளக் கொட்டாய் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் திடீரென ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மருந்தகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும், மருந்து, மாத்திரைகள் விற்பனை தொடர்பான தகவல்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது.

போலி கால்நடை மருந்தகம்
போலி கால்நடை மருந்தகம்

மேலும், முறையாக மருத்துவம் படிக்காமல் கால்நடைகளுக்கு சினை ஊசி போடும் மருத்துவர் என விளம்பரப்படுத்திக் கொள்வதும், கால்நடைகளுக்கு மருந்து, மாத்திரைகள் பரிந்துரைத்து எழுதி வழங்கி வந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்த கால்நடை பராமரிப்புத் துறையினர் மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் இதுபோன்று மருந்தகம், மருத்துவம் பார்ப்பவர் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டும் கோபி விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.