ETV Bharat / state

சான்றிதழ் பெற்ற தருமபுரி மாவட்ட வெற்றி வேட்பாளர்கள்!

தருமபுரி: அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளருக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

dharmapuri
author img

By

Published : May 24, 2019, 11:37 AM IST

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை தாமதமானது. பின்னர் பழுது நிவர்த்தி செய்யப்பட்ட பின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் 70 ஆயிரத்து 753 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஐந்து லட்சத்து 74 ஆயிரத்து 978 வாக்குகளும் இவருக்கு அடுத்தபடியாக பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐந்து லட்சத்து நான்காயிரத்து 235 வாக்குகளும் பெற்றனர்.

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் இவருக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை விட ஒன்பதாயிரத்து 394 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 88 ஆயிரத்து 632 ஆகும். திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் பெற்ற மொத்த வாக்குகள் 79 ஆயிரத்து 238.

பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஒரு லட்சத்து நான்காயிரத்து 37 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மணி 85 ஆயிரத்து 487 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இவர் திமுக வேட்பாளரை விட 18 ஆயிரத்து 550 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர்களுக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் மற்றும் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நேற்று காலை தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் தர்மபுரி மக்களவை மற்றும் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
சில மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை தாமதமானது.  பின்னர் பழுது நிவர்த்தி செய்த பின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் 70 ஆயிரத்து 753 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 978 வாக்குகளும் இவருக்கு அடுத்தபடியாக பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 வாக்குகளும் பெற்றனர்.
அதிகாலை 2 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆணையர் மலர்விழி தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில் குமாருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
இதேபோன்று அரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் இவருக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை விட 9 ஆயிரத்து 394 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 88 ஆயிரத்து 632 திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் பெற்ற மொத்த வாக்குகள் 79 ஆயிரத்து 238.
பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 37 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மணி 85 ஆயிரத்து 487 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் 18 ஆயிரத்து 550 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர்களுக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.