ETV Bharat / state

தர்மபுரி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்! - தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து 1965ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தர்மபுரி மாவட்டம், சங்க காலத்தில் 'தகடூர்' என அழைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட மன்னன் அதியமான், தமிழை வளர்ப்பதற்காக ஆயுட்காலத்தை அதிகரிக்கும் நெல்லிக்கனியை ஒளவை மூதாட்டிக்குப் பரிசளித்து பெருமை பெற்றவர். தர்மபுரி மாவட்டமானது மேற்கே கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தையும், கிழக்கே கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களையும், வடக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் தெற்கே சேலம் மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தின் பிரதானத்தொழில் விவசாயம். தமிழ் மக்களின் வாழ்வில் நீங்கா அங்கம் வகிக்கும் காவிரித்தாய், 'தென்னகத்தின் நயாகரா' எனப்படும் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைகிறாள்.

தர்மபுரி தொகுதிகள் உலா
தர்மபுரி தொகுதிகள் உலா
author img

By

Published : Mar 15, 2021, 6:53 PM IST

Updated : Mar 16, 2021, 1:49 PM IST

வாசல்:

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

தொகுதிகள் வலம்:

தர்மபுரி:

மாவட்டத்தின் தலைநகராக இருந்தாலும் தொழில் இல்லாத நகரமாகவே காட்சியளிக்கிறது, தர்மபுரி. இத்தொகுதியைச் சேர்ந்த மக்கள் வேலை தேடி பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்டப் பல்வேறு ஊர்களுக்குச் செல்கின்றனர்.

இதுவரை இப்பகுதியில் சிப்காட் அமைக்க இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டு, எந்தப் பணியும் தொடங்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிப்காட் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார். தர்மபுரி தொகுதியில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம், அதிகரித்த வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை பிரதானப் பிரச்னைகளாக உள்ளன. விளைபொருட்களை விற்கச் சந்தை, பூக்கள் ஏற்றுமதிக்கு மலர்ச்சந்தை உள்ளிட்டவை இப்பகுதியில் அமைக்கப்படவேண்டும்.

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் பெருமளவு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், தக்காளி விலை குறையும்போது, அதனைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும். இத்தொகுதிக்குட்பட்ட தும்பல அள்ளி அணைக்கு பாசனக் கால்வாய் அமைக்கும் திட்டம் விரைவில் முடிக்கப்பட வேண்டும்.

பென்னாகரம்:

இத்தொகுதி அதிக மலைக்கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். இங்கு எரிமலை, கோட்டூர் மலை, அலக்கட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்குச் சாலை வசதி ஏற்படுத்தித்தரவேண்டும்.

ஏரியூர் அடுத்த ஏமனூர் பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றின் குறுக்கே பரிசலில் சென்றுவருவதால், மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். காவிரி ஆற்றில் வரும் உபரி நீரை, பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பென்னாகரம் பகுதியில் விளைவிக்கப்படும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும்பொருளாக மாற்றி விற்பனை செய்ய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

அரூர்:

அரூர் வழியாகச் செல்லும் எட்டு வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென விவசாயிகள் போராடி வருகின்றனர். மொரப்பூர் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பயன்பெற ஈச்சம்பாடி அணையிலிருந்து நீரேற்று திட்டத்தைச் செயல்படுத்த முனைய வேண்டும். தர்மபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு எந்தவிதப் பணியும் தொடங்கப்படாததால் திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பகுதியில் இருக்கும் மாலிப்டினம் என்னும் ஆகாய விமானங்களில் பயன்படுத்தப்படும் தனிமத்தை எடுக்கும் ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைபெறவேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் அதிக அளவு மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

களநிலவரம்:

அதிமுக - பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமான ஆதரவாளர்களைப் பெற்றுள்ள தொகுதி, தர்மபுரி. கடந்த தேர்தலில் பாமக, அதிமுக தனித்தனியாகப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்த நிலையில், திமுக வெற்றி பெற்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக - அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், பாமக சார்பில் களம்காணும் வெங்கடேஸ்வரனுக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தர்மபுரி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்!

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சார்ந்த பி.என்.பி. இன்பசேகரன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்தார். இம்முறை இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கட்சியின் தலைவரும் மண்ணின் மைந்தருமான ஜி.கே.மணி போட்டியிடுவதால், அவருக்கு வெற்றிவாய்ப்பு இருப்பினும், பி.என்.பி. இன்பசேகரன் செய்த மக்கள் நலப்பணிகள் இத்தொகுதியில் அவருக்கே மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கினாலும் ஐயமில்லை. இத்தொகுதியைப் பொறுத்தவரை திமுகவிற்கும், பாமகவிற்கும் கடும்போட்டி நிலவுகிறது.

பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர், தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள கே.பி. அன்பழகன். இத்தொகுதியில் இவர் செல்வாக்குமிக்கத் தலைவராக அனைவராலும் பார்க்கப்படுகிறார். மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளதால், இரு கட்சியின் வாக்குகளும் இத்தொகுதியில் திமுகவிற்குப் பின்னடைவை உண்டாக்குகின்றன.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 2019இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தசாமி வெற்றி பெற்றார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வன்னியர் மற்றும் கொங்கு வேளாளர், பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் இதுவரை கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர்களே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளனர்.

ஆனால், கடந்த 2019 இடைத்தேர்தலில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியே வெற்றிபெற்றார். இதனால் அங்கு அதிருப்தியில் கொங்கு வேளாள கவுண்டர் சமூக மக்கள் இருக்கின்றனர். தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகியத் தொகுதிகளில் வன்னியர் வேட்பாளரே களமிறக்கப்பட்டு, வெற்றிபெற்றுவரும் நிலையில், தங்களது சமூகத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை மட்டுமாவது ஒதுக்க வேண்டும் என கொங்கு வேளாள கவுண்டர் சமூக மக்கள் நினைக்கின்றனர். அந்த எண்ணமே, கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வன்னியர் வெற்றிபெற்ற நிலையில், அதை ஆதரிக்காத கவுண்டர் இன மக்கள் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவை படுதோல்வி அடையச் செய்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக சார்பில் மீண்டும் இம்முறை கோவிந்தசாமி களமிறக்கப்பட்டிருக்கிறார். இது அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பத்தாதற்கு இத்தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அமமுக சார்பில் போட்டியிடுவதால், அத்தொகுதியில் மக்கள் அவருக்கு கட்சிப்பாகுபாடின்றி ஆதரவு அளிப்பார்கள் எனத் தெரிகிறது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியை வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத சூழ்நிலையாகவே இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற அரூா் இடைத்தேர்தலில், இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், சம்பத் குமார். இடைத்தேர்தல் என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி - அதிமுக கூட்டணி பலத்துடன் இவர் கடந்த முறை வெற்றி பெற்றார். ஆனால், பொதுவாகவே இத்தொகுதி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ள தொகுதி. இம்முறை இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.குமார் என்பவருக்கு வெற்றி வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதியில் திமுக கூட்டணியும், 2 தொகுதியில் அதிமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் இழுபறியும் நீடிக்கிறது.

Last Updated : Mar 16, 2021, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.