தருமபுரி மாவட்ட பஞ்சாயத்து 2018-2019ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட பஞ்சாயத்து ஆக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் பஞ்சாயத்து அமைச்சகத்திலிருந்து விருதினை வென்றுள்ளது.
மத்திய அரசின் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மாவட்ட பஞ்சாயத்து குழுத் தலைவர் யசோதா மதிவாணனுக்கு வழங்கினார்.
சிறந்த மாவட்ட பஞ்சாயத்து விருதை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் வழங்கி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வாழ்த்து பெற்றார்.