ETV Bharat / state

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள்: தருமபுரி ஆட்சியர் நேரில் ஆய்வு - ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆய்வுசெய்த தருமபுரி ஆட்சியர்

தருமபுரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை தருமபுரி ஆட்சியர் கார்த்திகா நேரில் ஆய்வுசெய்தார்.

தருமபுரி ஆட்சியர்
தருமபுரி ஆட்சியர்
author img

By

Published : Dec 2, 2020, 11:42 AM IST

தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்வது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக ஒகேனக்கல் பகுதியிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு மடம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஒகேனக்கல் பகுதியில் ஆய்வுமேற்கொண்டு ஒகேனக்கல் குடிநீர் உறிஞ்சும் பகுதி, சுத்திகரிப்பு நிலையம், சமநிலை நீர்தேக்கத் தொட்டி போன்றவற்றை நேரில் ஆய்வுசெய்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டு பகுதியில் காவிரி ஆற்றில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அளவிடும் முறை, தற்போது வரக்கூடிய நீரின் அளவு குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தார்.

தருமபுரி மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்-2 செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்திற்காக ஒகேனக்கல் முதலைப் பண்ணை அருகே தேர்வுசெய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தருமபுரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் ஆய்வு
தருமபுரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் ஆய்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படும் இடமான ஆலம்பாடியில் ஆய்வுசெய்து அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதித்து உத்தரவிட்டார். அத்துமீறி குளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.