தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை ரேஷன் கடையில் முதலமைச்சரின் கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கலந்துகொண்டு, 2ஆயிரம் ரூபாய் பணம், 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், மாவட்டத்தில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 788 குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா நிவாரண தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.