ETV Bharat / state

ஆடி 18... பென்னாகரத்தில் ஆடுகள் விற்பனை ஒரு கோடியாம்!

தருமபுரி: ஆடி பதினெட்டு பண்டிகையை முன்னிட்டு தருமபுரி, பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆடுகள் விற்பனை
author img

By

Published : Jul 31, 2019, 3:17 PM IST

ஆடி பதினெட்டாம் நாள் பண்டிகைக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூர், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், பெரும்பாலை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை பென்னாகரம் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

தருமபுரி மட்டுமல்லாது சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆடுகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டன.

ஆடுகள் விற்பனை
பண்டிகை காலம் என்பதால் ஒரு ஆடு ரூபாய் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தினால் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆடுகளின் விற்பனை ஒரு கோடியை கடந்துள்ளது.
ஆடுகள் உட்பட சந்தையின் மொத்த வருவாய் மூன்று கோடியை கடந்துள்ளது. இதனால் வணிகர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:nullBody:tn_dpi_01_goat_sale_vis_7204444Conclusion:ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வரும் ஆடி18 பண்டிகை முன்னிட்டு இன்று தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வாரச்சந்தையில் குவிந்த ஆட்டு வியாபாரிகளால் ஆடுகளின் விற்பனை அதிகரித்தது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஏரியூர், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், பெரும்பாலை போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை பென்னாகரம் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவந்தனர். தற்போது வரும் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு மேச்சேரி, ஓமலூர், சேலம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, பெங்களுர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை வாங்கி லாரி மற்றும் டெம்போ போன்ற வாகனங்கள் மூலம் ஏற்றிச் சென்றனர்.

இங்கு உள்ள கிராமங்கள் மலை சார்ந்த கிராமங்களாக உள்ளதால் காடுகளில் உள்ள இயற்கையான உணவுகளை இங்குள்ள ஆடுகள் உண்டு வளர்வதால் ஆட்டிறைச்சி ருசி அதிகம் என்பதால் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் அதிகளவு விற்பனையானது. பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடி பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ. 5000 முதல் 10000 வரை விற்பனை ஆனது.

இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.