தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது பெண் குழந்தையிடம் கல்லூரி மாணவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குழந்தையின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் மாதேஸ்வரன் என்பவரிடம் பென்னாகரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு மாதேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மகளிடம் பாலியல் அத்துமீறல்: தந்தை போக்சோவில் கைது!