ETV Bharat / state

தருமபுரியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு!

author img

By

Published : Aug 9, 2020, 7:38 PM IST

தருமபுரி: அரூர் பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 15க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன.

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொய்யப்பட்டி பகுதியில் சென்ற வாரம் 10க்கும் மேற்பட்ட மாடுகள் சந்தேகமான முறையில் உயிரிழந்தன. பின்னர், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அப்பகுதியில் முகாம் அமைத்து மாடுகள் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்தனர். தற்போது மழை பெய்து வருவதால் ஆந்த்ராக்ஸ் நோயானது அரூர் பகுதியில் உள்ள கால்நடைகளை தாக்கி வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் கூறுகையில், “அரூர் பொய்யபட்டி பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் கிருமி தாக்கத்தின் காரணமாக மாடுகளின் உயிரிழப்பு ஏற்படுகின்றது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நோய் தாக்கம் கண்டறியப்பட்ட பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் முகாம் அமைத்து 12, 750 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதுபோல ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழக்கும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டாமல், அதனை புதைக்க கால்நடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரூர் பகுதியில் உயிரிழந்த கால்நடையை இறைச்சிக்காக வெட்டியதால் அதிலிருந்து வெளியேறிய ஆந்த்ராக்ஸ் கிருமியானது மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்றைய (08.08.20) தினம் கொங்கவேம்பு பகுதியிலும், இன்று (09.08.20) எட்டிப்பட்டி பகுதிகளிலும் கால்நடைகளின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நாளை (10.08.20) இப்பகுதிக்கு முகாம் அமைத்து, கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசிகள் போடப்படும் என்றார். மேலும் ஆந்த்ராக்ஸ் நோயினால் உயிரிழந்த கால்நடைகளை, இறைச்சிக்காக வெட்டுவதற்கு பதிலாக, அதனை புதைக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், பொய்யபட்டி பகுதியில் பத்து மாடுகள், நேற்று (08.08.20) கொங்கவேம்பு பகுதியில் இரண்டு மாடுகள் மற்றும் இன்று (069.08.20) மொரப்பூர் அருகே உள்ள எட்டியபட்டி அழகிரிநகர் பகுதியைச் சார்ந்த மூன்று மாடுகள் என மொத்தம் 15 மாடுகள் ஆந்த்ராக்ஸ் நோய் கிருமி தாக்கி உயிரிழந்தன.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.