தருமபுரி மாவட்டத்தில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தருமபுரியில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் எஸ்.பி.கார்த்திகா தொடங்கி வைத்தார். இதில், வணிகா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டுகொள்ள வந்தவா்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த சோதனைக்கு பின், கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு