தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 496 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் தற்போது கரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 264ஆக இருக்கிறது