தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மலர்விழி தலைமையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மலர்விழி,
- 'மாவட்டத்திற்கு ஈ-பாஸ் பெற்றுக்கொண்டு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அனைவரையும், சோதனைச் சாவடியிலிருந்து செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
- தருமபுரியை நான்கு மண்டலங்களாகப் பிரித்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் அனைவரும் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்திலிருந்து மோட்டார் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து வருபவர்களைக் கண்காணித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிராமத்தில் புதிதாக வருபவர்களைக் கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க, ஒரு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கரோனா பரவலைத் தடுக்க கை கழுவுதல், முகக் கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு கிராமத்திலும் தீவிரமாக கண்காணிக்க கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில், மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் அரூா், சார் ஆட்சியர் பிரதாப், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், கரோனா சிறப்பு அலுவலர் சீனிவாசன் ராஜி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.