தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா இன்று நடைபெறுகிறது. தேய்பிறை அஷ்டமி தினத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவர்.
தற்போது கொரோனா வைரசால் இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காலபைரவர் ஆலயத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறி இருந்தால் திருக்கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ரயில் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்களிடம் விசாரணை!