ETV Bharat / state

திருமணமான ஒன்றரை ஆண்டே ஆன நிலையில் கட்டடத் தொழிலாளி கொலை! - Dharmapuri District News

தருமபுரி: ஒசூர் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டே ஆன நிலையில் கட்டடத்தொழிலாளி கழுத்தறுக்கப்பட்ட நிலையில், வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

murder
murder
author img

By

Published : Dec 10, 2020, 2:06 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள சீங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (27). இவருக்கும் சத்தியா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் உள்ள எழில் நகரில் வாடகை வீட்டில் வசித்து கட்டடத்தொழில் செய்துவந்துள்ளார்.

நேற்று (டிச. 09) சொந்த ஊரான சீங்கோட்டை கிராமத்திற்குச் சென்று, மாலை வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (டிச. 10) காலை 5 மணியளவில் தனபாலை யாரோ தாக்கிவிட்டதாகவும் கணவர் ரத்த வெள்ளத்துடன் வீட்டில் வந்து மயங்கி விழுந்ததாகவும் மனைவி சத்யா கூறி அழுதுள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்ததில் கழுத்தறுக்கப்பட்டு முகத்தில் காயங்களுடன் தனபால் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு சிப்காட் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினர், ஒசூர் டிஎஸ்பி முரளி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மனைவி சத்தியாவிடம் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்க பெண்போல் நடித்து ரூ.3.5 லட்சம் மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.