தருமபுரி மாவட்டம் ஜருகு அடுத்த மாணிக்கம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முருகன்(18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் முருகன் இருசக்கர வாகனத்தில் தருமபுரிக்கு சென்று மீன் வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது நல்லம்பள்ளி அடுத்த கெங்கலாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலை வழியாக அவர் வந்துள்ளார்.
அப்போது ஹைதராபாத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தொப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கார்-லாரி விபத்து: கர்ப்பிணி உள்பட 7 பேர் உயிரிழப்பு!