ETV Bharat / state

தருமபுரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு! - வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

தருமபுரி: செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இன்று (டிச.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

author img

By

Published : Dec 24, 2020, 6:33 PM IST

தருமபுரி மாவட்டம் செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தருமபுரி மாவட்டத்தின் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளான தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படவுள்ள செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அங்குள்ள வசதிகள், ஆய்வு விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்தில்நடைபெறும்.

தேர்தலில் வாக்குப்பதிவு பயன்பாட்டிற்காக 3 ஆயிரத்து 537 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2ஆயிரத்து 625 விவிபேட் எந்திரங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வரப்பெற்ற வாக்குப்பதிவு எந்திரங்களிலுள்ள தரவுகளை அளிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், அரூர் துணை ஆட்சியர் பிரதாப், வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்கள் சேர்க்கையில் மோசடி - பரபரப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.