ETV Bharat / state

முகக்கவசம் அணிவது கட்டாயம்- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் - தருமபுரி மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஏப்.9) நடைபெற்றது.

தருமபுரி ஆட்சியர்
தருமபுரி ஆட்சியர்
author img

By

Published : Apr 9, 2021, 10:51 PM IST

தர்மபுரியில் கரோனா தடுப்பு பணிகள் மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமையில் இன்று (ஏப்.9) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

அதில், “அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.

திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டும்தான் அனுமதிக்க வேண்டும். மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்கு நாளை (ஏப்.10) முதல் தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துரைத்தார்.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.