சேலம், தருமபுரி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (செப்.29) சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (செப். 30) தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாய் சேய் அவசரகால சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்தார்.
![மருத்துவமனையை திறந்துவைத்த முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13216287_dpi.jpg)
இதனையடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு நிகழ்ச்சியில் 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 7 ஊராட்சி மன்ற தலைவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் திவ்யதா்ஷினி. தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்