தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கைலாயபுரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் மகன் மாதேஷ்(13) 7ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், இதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் வெற்றிவேல் (8) 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த இரண்டு சிறுவர்களும் வாணியாற்று பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றில் சிறுவர்கள் இருவரும் தவறி விழுந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள், உடனடியாக கிணற்றில் குதித்து சிறுவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுவர்கள் உடல்கள் உடற்கூராய்வுக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.