தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. அவர் எம்.சி.ஏ முடித்துவிட்டு மூன்று ஆண்டுகளாக சென்னை, பெங்களூரு பகுதிகளில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். தனியாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணிய அவர், உணவகம் வைக்க திட்டமிட்டார்.
அதன்படி இண்டூர் பகுதியில் அசைவ உணவகம் தொடங்கினார். முதலில் தனது கடையை பிரபலபடுத்துவதற்காக 10 பைசா கொடுத்தால் சிக்கன் பிரியாணி அளிப்பதாக விளம்பரம் செய்தார். அதில் முதலில் வரும் 200 பேருக்கு மட்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த விளம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீ போல பரவி மக்கள் கூட்டம் அவரது கடைக்கு படையெடுக்க தொடங்கியது.
அப்படி 300 பேருக்கும் மேல் கடையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிமையாளர் பாலாஜி, "கணினி மென்பொருள், தொழில்நுட்ப என பணியாற்றி அலுத்துவிட்டது. அதனால் புதிதாக கிராமப் பகுதியில் ஏதாவது தொழில் தொடங்க எண்ணின்னேன். அதன்படி அசைவ உணவகம் தொடங்கி உள்ளேன். இந்த கடையில் இணையதளம் வாயிலாகவும் உணவை ஆர்டர் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார். அவரது உணவகம் அப்பகுதியில் பிரபரலமாகவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட ஆசை...! கரோனா வைத்தது பூசை...!