ETV Bharat / state

தித்திக்கும் கரும்பு பயிரை இந்தியாவில் அறிமுகம் செய்த தருமபுரி அதியமான்கள்! - Histroy of Dharmapuri

வாயால் சொன்னாலே நாவில் தேனாக தித்திக்கும் 'கரும்பு'. இது இந்தியாவில் எப்படி அறிமுகமானது என்று தமிழ் இலக்கியங்களின் மூலம் விவரிக்கிறார், தருமபுரி கலைகல்லூரி உதவி பேராசிரியர் சந்திரசேகர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 30, 2022, 10:16 PM IST

தித்திக்கும் கரும்பு பயிரை இந்தியாவில் அறிமுகம் செய்த தருமபுரி அதியமான்கள்!

தருமபுரி: 'கரும்பு' (sugarcane) முதன் முதலில் அறிமுகம் செய்தது 'அதியமான்கள்' (Adhiyaman) என தமிழ் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

புறநானூற்று பாடலில், “அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீர்அக இருக்கை ஆழி சூட்டிய தென்னிலை மரபின் நின் முன்னோர் போல” என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் பசிபிக் தீவுகளில் இருந்து கரும்பு முதன்முதலாக பயிரிடப்பட்டது என்றும்; இந்தியாவில் கி.மு.500ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கரும்பு குறித்து புறநானூற்றின் 99ஆவது பாடலில் 'அதியமான்’ என்ற சேர மன்னன் கரும்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினான் என்கிறது. கரும்பு வரலாறு குறித்து தருமபுரி அரசு கலைகல்லூரி உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களிடம் கேட்டபோது, 'தருமபுரி மாவட்டம் பழங்காலங்கத்தில் 'தகடூர்' என அழைக்கப்பட்து.

தகடூர்: எங்கு போர்கள் நடைபெற்றாலும் தருமபுரி வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. அதன் காரணமாக அனைத்து விதமான கலாசாரம் நிறைந்த பகுதியாக தருமபுரி இருந்தது. சங்க இலக்கியமான அகநானூறில் 'விறகு முடி தகடூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளக்கம், பல்வேறு வகையான காலகட்டங்களில் மக்கள் இப்பகுதிக்கு வந்து சென்றார்கள் என அந்த வார்த்தையை குறிப்பிடுகின்றனர்.

பொங்கல் காலங்களில் அதிகமாக பேசும் பொருளாக உள்ளது, கரும்பு. கரும்பை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது தற்போதைய தருமபுரி எனப்படும் பண்டைய தகடூரை ஆண்ட 'அதியமான்கள்' தான். 'அதியமான் நெடுமான் அஞ்சி' என்பது அதியமான் பரம்பரையின் பெயர். இதன்மூலம் கரும்பை அதியமான் அறிமுகப்படுத்தியதை சங்க காலத்தில் ஔவையார் குறிப்பிடுகின்றார்.

'கரும்பு' தெற்கு ஆசியாவில் ஜாவா, இந்தோனேசியா போன்ற பகுதிகளில் விளையக்கூடிய வகையைச் சார்ந்தது. எப்படி அதியமான்கள் இங்கு எப்படி அறிமுகம் செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இன்றைய காசி - வாரணாசியில் இருந்து ராமேஸ்வரம் வரை மகதீசன் பெருவழி இருந்ததாக அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இன்றைய ஒடிசா கலிங்க துறைமுகத்தில் இருந்து தருமபுரி வழியாக அனைத்து வாணிபங்களும் நடந்தன. சோழர்கள் உலகத்தைக் கட்டி ஆழ்ந்த கடற்படையை வைத்திருந்தவர்கள்.

கலிங்க துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு, தென் கிழக்கு ஆசியாவில் தங்களது வர்த்தகத்தை வைத்திருந்தனர். அப்பகுதியில் இருந்து ஒரு வியாபாரி கலிங்கத்திற்கு வந்து அங்கிருந்து, தமிழகத்தில் நுழையும்போது அதனை சோதனை செய்த அதியமான்கள், அப்போது கிடைத்த கரும்பை பயிரிட்டதால் அதியமான்கள் கரும்பை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.

அலெக்சாண்டர் உறுதிப்படுத்திய தகவல்: அதியமான்கள் காலத்தில் கரும்பு இருந்ததை அலெக்சாண்டர் (Alexander) குறிப்பிட்டு உள்ளார். தேன் பூச்சிகள் கட்டக்கூடிய புல் விளைகிறது. அதனைப் பார்க்க செல்ல வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், ஆனால் முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலகட்டங்களில் தகடூா் பகுதியில் சுவையான கரும்புகள் விளைந்திருப்பதை அகநானூறு, புறநானூறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆலை ஓடும் சத்தம்; யானை பிளிரும் சத்தம்போல, சத்தம் வந்ததாகவும் எப்பொழுதும் தொழில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பை அறிமுகம் செய்தது குறித்து எந்த இலக்கியங்களிலும் எந்த மன்னரும் உரிமை கொண்டாடியது இல்லை. மேலும், இந்த கரும்பை அறிமுகப்படுத்தியவர்கள் குறித்து அக்கால புலவர் ஔவையார் (Avvaiyar) மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் ஆகியோர் குறிப்புகளில் அதியமான்கள் தான் கரும்பை அறிமுகப்படுத்தியது என்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.300 கோடி செலவில் செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.