தென்பெண்ணையாறு கர்நாடக மாநிலத்தில் உருவாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. 1892 -1933 ஒப்பந்தத்தின்படி தென்பெண்ணையாற்றில் எந்தவிதமான கட்டுமானப் பணியும் செய்யக்கூடாது என்பது ஒப்பந்தம்.
தற்போது கர்நாடக அரசு ஆற்றில் தடுப்பணைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசிடம் பேசி தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் இன்று பேசினார். திமுக தலைவர் ஸ்டாலின் நாளை ஐந்து மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாயை தகாத வார்த்தையில் திட்டிய தாய்மாமனை கருங்கல்லால் குத்திக் கொலை செய்த மகன்!