திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சேலம் - வேலூர் பிரதான சாலையில், அரூர் அடுத்த மாம்பட்டி அருகே பேருந்து பழுதடைந்தது.
இதனையடுத்து பேருந்தை ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் சரிசெய்து கொண்டிருந்தபோது பேருந்தின் அருகே இருந்த மரத்தின் கிளை பேருந்தின் மீது விழுந்தது. தொடர்ந்து பேருந்தின் மேற்கூரை உடைந்து பயணிகளின் மேல் விழுந்தது.
இதில் நான்கு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் ஓட்டுநர் பேருந்தை சரிசெய்து காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதனால் சிறிது நேரம் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் பேருந்துகள் -சிசிடிவி வீடியோ!