ETV Bharat / state

நிலத்தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி - எல்லை பாதுகாப்புப் படை வீரர்

தர்மபுரி: நிலத்தகராறு காரணமாக சொந்த தம்பியே அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம், தொப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்வரன்
author img

By

Published : Jul 16, 2019, 3:24 PM IST

தருமபுரி மாவட்டம் தொப்பூர் தர்கா அருகே அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரன், பழனி, ராமன் மற்றும் காசி என நான்கு மகன்கள் உள்ளனர். இவருக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் தொப்பூரில் உள்ளது. ராமன் என்பவர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று விட்டார். மற்ற மூன்று பேரும் 4 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொண்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரன் எல்லை பாதுகாப்புப் படையிலிருந்து ஓய்வு பெற்று, விவசாயம் செய்து வந்துள்ளார். விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் ஈஸ்வரனுக்கும், பழனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இன்று மாலை ஈஸ்வரன் தனது விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது, வழக்கம் போல பழனிக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

பின்னர், ஆத்திரமடைந்த பழனி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஈஸ்வரனின் தலையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற பழனியை தொப்பூர் காவல் அலுவலர் ராஜ்குமார் கைது செய்தார். இறந்த ஈஸ்வரனுக்குச் சந்திரா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Intro:tn_dpi_01_landproblam_murder_img_7204444Body:tn_dpi_01_landproblam_murder_img_7204444Conclusion:தர்மபுரி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் நிலத்தகராறில் வெட்டிக் கொலை தம்பி கைது...........தர்மபுரி அருகே தொப்பூரில்ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் நிலத்தகராறு தம்பியால் வெட்டி கொலை செய்யப்பட்டார் .தம்பி போலீசில் சரண் அடைந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தர்கா அருகே வசித்து வருபவர் அய்யாவு இவர்களுக்கு ஈஸ்வரன் 45.பழனி 42.ராமன் 40.காசி 38. என நான்கு மகன்கள் உள்ளனர் இவருக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் தோப்பு ஊரில் உள்ளது. இதில் ராமன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு உள்ள மூன்று பேரும் 4 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொண்டனர் இதில் ஈஸ்வரன் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு விவசாயத்தில் ஈடுபட்டார். இந்த விவசாயத்தில் ஈடுபடும் பொழுது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஈஸ்வரனுக்கும் தனது உடன் பிறந்த தம்பி பழனிக்கும் கடந்த சில நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்தது .இன்று மாலை ஈஸ்வரன் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும்பொழுது வழக்கம் போல பழனிக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த தம்பி பழனி 42.தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஈஸ்வரனின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஈஸ்வரன் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் பரிதாபமாக துடிதுடித்து இறந்து போனார். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற பழனியை தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கைது செய்தார். இறந்த ஈஸ்வரனுக்கு சந்திரா என்ற மனைவியும் கௌஷிக் 12.என்ற மகனும் கண்மதி 14.என்ற மகளும் உள்ளனர்.பழனிக்கு இதழ் சிந்து 9.இதழ்சிந்துஜா 8.ரித்திக்வாசன் 7.என மூன்று குழந்தைகள் உள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.