தர்மபுரி: அருகே முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் திருவிழாவின் மூன்றாவது நாள் நிகழ்வாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கபடி, மாமியார் மருமகள் கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.
இளைஞர்களை கவரும் வகையில் சாப்பாட்டு ராமன் போட்டி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சிக்கன் பிரியாணி ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தனர். சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கஜேந்திரன் என்ற இளைஞர் முதல் பரிசை வென்றார்.
30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு கொண்ட ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் வெற்றி வேல் என்ற இளைஞர் சரியாக பத்து நிமிடத்தில் ஒரு கிலோ சில்லி சிக்கன் வறுவல் சாப்பிட்டு முடித்தார்.
அதை தொடர்ந்து 14 நிமிடத்தில் சுரேந்தர் என்ற இளைஞர் சாப்பிட்டு முடித்து இரண்டாம் பரிசு பெற்று சென்றார். அரை கிலோ ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டியில் ஏழு நிமிடத்தில் ராஜ்குமார் என்ற இளைஞர் ஐஸ்கிரீமை சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார்.
ஊரில் உள்ள சிறுசு முதல் பெருசு வரை மகிழ்ச்சியையும் வகையில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பல்வேறு வகையான போட்டிகளை வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் சரவணன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காளியப்பன் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு!