ETV Bharat / state

’மீண்டும் வாய்ப்புக் கொடுங்கள்’ - வாக்குச்  சேகரித்த அரூர் அமமுக வேட்பாளர் - etv news

ஓராண்டு மட்டுமே பணியாற்றிய எனக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுங்கள் என அரூர் அமமுக வேட்பாளர் முருகன் வாக்குச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்.

’’மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்’’  என வாக்கு  சேகரித்த் அரூர் அமமுக வேட்பாளர் முருகன்

author img

By

Published : Apr 1, 2021, 6:48 AM IST

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர். முருகன் போட்டியிடுகிறார். அரூர் தொகுதிக்குள்பட்ட ஜடையம்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி, ஆர். கோபிநாதம்பட்டி, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அமமுக வேட்பாளர் முருகன் வாக்குச் சேகரித்தார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ என்பதால் மலை கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, தொகுதிக்குள்பட்ட பகுதியில் குடிநீர், சாலை வசதிகள் இல்லை அதனை செய்துதருமாறு வலியுறுத்தினர். இது குறித்து, அவர் கூறுகையில், ’’நான் ஓராண்டுகள் மட்டுமே சட்டப்பேரவைத் உறுப்பினராகப் பணியாற்றினேன். அப்பொழுது, தொகுதி முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னை தகுதிநீக்கம் செய்துவிட்டார்கள்.

இதனால், என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. தற்பொழுது, மீண்டும் எனக்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய வாய்ப்புக் கொடுங்கள், தொகுதி மக்களின் தேவையைப் பூர்த்திசெய்வேன்.

குடிநீர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஜீவாதாரப் பிரச்சினைகள், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலை: ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் டிவிஎஸ் நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.