தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஐந்தாவது மாநில மாநாடு தருமபுரியில் நடைபெற்றது. மாநாட்டில் சிஐடியு மாநில தலைவர் ஏ. சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் 57 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மனிதவள குறியீட்டில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றால், அதற்கு அங்கன்வாடி ஊழியர்கள்தான் காரணம். கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு, ஊட்டச்சத்து, சுகாதாரம் பராமரிப்பு உள்ளிட்ட மனிதவளத்தை மேம்படுத்தும் செயல்களை அங்கன்வாடி ஊழியர்கள் செய்துவருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடும் அங்கன்வாடி உதவியாளருக்கு 4500 ரூபாயும் ஊழியர்களுக்கு 7700 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மிகவும் குறைவான சம்பளத்தை அரசு வழங்கிவருகிறது.
இவர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகாலம் பணிமுடித்து கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புக்கள் தொடங்கப்படுகிறது. எனவே அங்கன்வாடி பணியாளர்களையே ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும். குறைந்தளவு ஊதியமாக உதவியாளர்களுக்கு 18000 ரூபாயும் பணியாளர்களுக்கு 21000 ரூபாயும் வழங்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பும் இல்லை’ - அமைச்சர் ஆர்பி உதயகுமார்!