ETV Bharat / state

6 மாதத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு - அன்புமணி ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை நிறைவேற்றுவதற்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும் என்றும்; 10.5% வன்னியா் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு 6 மாதத்தில் கொண்டுவந்து நிறைவேற்றும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 4, 2022, 3:53 PM IST

Updated : Dec 4, 2022, 4:40 PM IST

தர்மபுரி: பொம்மிடி என்னும் ஊரில் பாமக கிழக்கு மாவட்டச்செயலாளர் செந்தில் என்பவரின் மகள் திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் இந்த ஆண்டு 450 டி.எம்.சி தண்ணீர் உபரியாக சென்றுள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்கு மூன்று டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை. அதேபோல் தென்பெண்ணையாற்றில் ஆண்டுக்கு 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, இந்த தென்பெண்ணை, காவிரி உபரி நீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை நிறைவேற்றுவதற்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். இதற்கு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளட்டும். இதற்கு ஆண்டுக்கு 20ஆயிரம் கோடி ரூபாயை நீர் மேலாண்மைக்கு மட்டும், முதலமைச்சர் ஒதுக்கித்தர வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்

திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு, தேர்தலைச் சந்திக்கும்போது தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி அமைத்தால், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. இதுவரை அந்த தேர்தல் வாக்குறுதியை, சட்டமாக இயற்றவில்லை. எனவே, உடனடியாக அதை புதிய சட்டமாக நிறைவேற்றி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் நாங்கள் வந்தால் பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் எனத் தெரிவித்தார்கள். தற்போது 10 கடைகளைக் கூட மூடவில்லை. ஆனால், சட்ட விரோதமாக மதுக் கடைகளை நடத்துபவர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீட்டைத்தரும் சட்டத்தை இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கொண்டுவரும். உறுதியாக நடக்கும். அதனை நடக்க வைப்போம். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசை அன்பாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்' என்றார்.

இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்கும் பாபா திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ள நிலையில் அதில் மது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறித்து கேள்விக்கு, 'திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் சமுதாய பொறுப்புள்ள, கடமை உணர்வு உள்ளவர். எது வேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

வருகிற 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கேற்றவாறு வியூகங்களை 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. எனவே, தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு எங்களது முடிவை எடுப்போம்’ என அன்புமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதி விரைவில் துணை முதல்வராக வர வேண்டும் - கெளதம் சிகாமணி எம்.பி.

Last Updated : Dec 4, 2022, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.