ETV Bharat / state

ரயில் பாதை திட்டம் நிறைவேற மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை - அன்புமணி ராமதாஸ் பேட்டி

author img

By

Published : Sep 13, 2019, 7:22 PM IST

Updated : Sep 13, 2019, 11:42 PM IST

தருமபுரி - மொரப்பூரிடையே இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற மாநில அரசின் ஒத்துழைப்புத் தேவை என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

anbumani-ramadoss

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தருமபுரி-மொரப்பூரிடையே இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம், தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு. இத்திட்டத்துக்காக பாமக தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வந்தது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த இந்த திட்டத்துக்காக ரூ.358.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மார்ச் 4ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, முதற்கட்ட பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் பணிகள் நடந்துவருகிறது.

இந்நிலையில், ரயில் பாதை அமைக்கும் 36 கி.மீ தொலைவு கொண்ட இந்த திட்டத்தில் தற்போது 28 கி.மீ தொலைவுக்கான நிலம் குறித்த ஆவணங்கள் தெளிவாக உள்ளது. மீதமுள்ள 8 கி.மீ தொலைவு நிலங்கள் ஆக்கிரமிப்புகளாக உள்ளன.

எனவே இந்நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்குமாறு தமிழ்நாடு அரசிடம் மத்திய ரயில்வே துறை கோரிக்கை வைத்துள்ளது. இந்த 8 கி.மீ தூர நிலம்தான் ரயில் பாதை அமைக்க தற்போது பிரச்னைக்கு உரியதாக உள்ளது. எனவே இதை கையகப்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

அன்புமணி ராமதாஸ் பேட்டி

இதற்காக தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளித்து ஆட்சியரிடம் பேசி குழு அமைத்து விரைவாக நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் வழங்கினால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் திட்டம் நிறைவேறும்” என்றார்.

Intro:tn_dpi_01_anbumani_ramadoss_byte_7204444

Body:tn_dpi_01_anbumani_ramadoss_byte_7204444

Conclusion:

தருமபுரி-மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை தர்மபுரியில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பேட்டி...

தருமபுரி-மொரப்பூர் இடையே இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு. இந்த திட்டத்துக்காக பாமக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, வலியுறுத்தி, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வந்தது. தருமபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் பலமுறை அமைச்சர்களை சந்தித்தார். அன்றைய மத்திய ரயில்வே இணை அமைச்சர் அரங்க.வேலு முயற்சியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டது. அன்று, மத்திய அரசு இந்த திட்டத்துக்கு 50 சதவீத நிதியை வழங்க முன்வந்தது. தமிழக அரசின் பங்களிப்பு நிதியான 50 சதவீத நிதியை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி வழங்க மறுத்து விட்டார். எனவே, அன்று இந்த திட்டம் வரவில்லை. தருமபுரி தொகுதியில் எம்.பி-யாக இருந்த தாமரைச்செல்வனும் இந்த திட்டத்துக்கு குரல் கொடுத்தார். அதன் பின்னர் தருமபுரி எம்.பி-யாக தேர்வு பெற்ற நான் மத்திய ரயில்வே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் 18 முறை சந்தித்து பேசி கோரிக்கை வைத்து இந்த திட்டத்தை நிறைவேற்றச் செய்துள்ளேன். இந்த திட்டத்துக்காக ரூ.358.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த மார்ச் 4-ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, முதற்கட்ட பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 

தற்போது நில ஆர்ஜிதத்தில் சில சிக்கல்கள் நிலவுவதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். 36 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்தில் தற்போது 28 கிலோ மீட்டர் தொலைவுக்கான இடம் தெளிவாக உள்ளது. மீதமுள்ள 8 கிலோ மீட்டரில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை கையகப்படுத்திக் கொடுக்குமாறு தமிழக அரசிடம் மத்திய ரயில்வே துறை கோரிக்கை வைத்துள்ளது. இந்த இடத்தை கையகப்படுத்த தேவையான அளவு ரயில்வே துறையிடம் நிதியும் உள்ளது. தருமபுரி நகருக்கு அருகிலுள்ள 8 கிலோ மீட்டர் தூர இடம் தான் பிரச்சினைக்கு உரியதாக உள்ளது. இதை கையகப்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. 

ஆட்சியரிடம் பேசி குழு அமைத்து விரைவாக நிலம் கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் வழங்கினால் ஓரிரண்டு ஆண்டுகளில் திட்டம் நிறைவேறும். சென்னையில் ரயில் ஏறி நேரடியாக தருமபுரிக்கு வந்து சேரும் கனவு நனவாகும். இந்த திட்டம் நிறைவேறினால் தருமபுரிக்கு பெரும் வளர்ச்சி ஏற்படும். ரயில்வே துறை அதிகாரிகள், தமிழக அரசு ஆகியோரிடம் பேசி திட்டத்தை வேகப்படுத்த குழு அமைத்து செயல்படுவோம். தற்போது 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. திட்டத்துக்கு நிதி போதவில்லை என்றாலும் மத்திய அமைச்சரிடம் பேசி பெற்றுத் தர வேண்டிய பணியை நான் மேற்கொள்வேன்.

இவ்வாறு கூறினார்.

Last Updated : Sep 13, 2019, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.