ETV Bharat / state

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு - anbumani ramadoss press meet

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Feb 17, 2022, 10:46 AM IST

தர்மபுரி: நகராட்சி மற்றும் 10 பேரூராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசுகையில்,

”2014 எம்பி தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள், அதற்கு நன்றி. தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை 2500 கோடி. மது விற்பனையில் விழுப்புரம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே போட்டியிட்டுக்கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிழைப்பிற்காக அண்டை மாநிலங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இதற்கு காரணம் தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பின்மை. அதனைப் போக்க சிப்காட் அமைக்க வேண்டும் என்பதை ஜெயலலிதாவும், கருணாநிதியும் நிறைவேற்றவில்லை.

தற்போது உள்ள திமுக என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை. தர்மபுரி நகராட்சியை பாமக கைப்பற்றும். பாமக தலைவரானால் தர்மபுரி நகராட்சியில் மதுக்கடைகள் இருக்காது என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்

மாவட்ட வளர்ச்சிக்கு பாமக மட்டுமே பாடுபடும். திமுகவும் அதிமுகவும் முயற்சிக்க மாட்டார்கள். தர்மபுரி மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த எம்பி தேர்தலின்போது மாஜி முதலமைச்சர் பழனிசாமி தர்மபுரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்தார். பின்னர் நிதியில்லை என்றார்.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக மக்களுக்காக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி நிறைவேற்றித் தந்தவர் மருத்துவர் ராமதாஸ். 55 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டது.

அன்புமணி ராமதாஸ்

ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு திரும்பி பார்க்கும் வகையில், தர்மபுரி ஸ்தம்பிக்கும் வகையில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் விரைவில் நடத்தப்படும். 2026 தேர்தலில் பாமக ஆட்சியமைக்கும் என” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் மதுரையை கலக்கும் ’மாஸ்டர்’ விஜய்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.