ETV Bharat / state

இவர்கள் யாருடைய அடிமை என்று தெரியும்! - அதிமுகவை விளாசிய பழனியப்பன்!

தருமபுரி: 2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பதில் கட்சியினரிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிமுக அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளைப் பேசிவருவதாகவும், முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன் தருமபுரியில் பேட்டியளித்துள்ளார்.

AMMK Palaniappan at Dharamapuri
author img

By

Published : Nov 25, 2019, 8:10 PM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, தருமபுரியில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் கலந்துகொண்டு, கட்சியினரிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னதாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து கட்சி உறுப்பினராக இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர், ஆனால் ஒருவர் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற இந்த நடைமுறை, அதிமுகவில் ஏற்கனவே உள்ளது எனக் கூறினார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் நினைத்தால் சட்டத்திட்டங்களை தளர்த்தி வாய்ப்பு வழங்கலாம் எனவும், இவர்கள் யாரை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் இதுபோன்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

AMMK Palaniappan at Dharamapuri

தொடர்ந்து பேசிய அவர், ”நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில், அண்ணா திமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை என்று பேசி இருக்கிறார்கள். ஆனால் நேற்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தான் சொல்லியதால்தான் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் மௌனவிரதம் இருந்தார் என்றும், தான்கூறியதால்தான் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் இணைந்தார்கள் என்றும் பேசியிருக்கிறார். நாங்கள் அடிமை அரசு இல்லை என்று சொல்லுகிறார்கள், ஆனால் நேற்று குருமூர்த்தி பேசியதில் இவர்கள் யாருடைய அடிமை என்பதற்கு தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது” என்றும் கூறினார்.

இதையும் படிங்க:

நீட் ஆள்மாறாட்டம்: மாணவியின் தாயார் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

Intro:tn_dpi_01_ammk_palaniappan_byte_7204444

Body:tn_dpi_01_ammk_palaniappan_byte_7204444

Conclusion:

2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பதில் தற்போதைய குழப்பம் ஏற்பட்டுவிட்டது முன்னாள் அமைச்சரும் அமமுக துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன் தருமபுரியில் பேட்டி.  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம்  இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு கட்சியினரிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பன்.    நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து கட்சி உறுப்பினராக இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர் ஆனால் அதிமுகவில் ஏற்கனவே ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ஐந்து ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்கவேண்டும் அதிமுக பொது செயலாளர் நினைத்தால் சட்டத்திட்டங்களை தளர்த்தி வாய்ப்பு வழங்கலாம். இவர்கள் யாரையே மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார்கள் என்று  தெரியவில்லை என்றார் . நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் அண்ணா திமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை என்று பேசி இருக்கிறார்கள் நேற்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தி தான் சொல்லியதால் தான் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் மௌன விரதம் இருந்தார் என்றும் குருமூர்த்தி சொன்னதால்தான் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைந்தார்கள் என்று குருமூர்த்தி பேசியிருக்கிறார்.அடிமை அரசு இல்லை என்று சொல்லுகிற இவர்கள் நேற்று குருமூர்த்தி பேச்சில் இவர்கள் யார் அடிமை என்பதை தெளிவான பதிலாக தெரிந்துவிட்டது. அதிமுக பொதுக்குழுவில் பேசிய அமைச்சர் தங்கமணி பேசியதற்கும் கே.பி முனுசாமி பேசியதற்கும் வார்த்தை முரண்பாடுகள் உள்ளது.பொதுத் தேர்தல் வந்தால் யாரை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பது அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என யாரை குறிப்பிடுவது என்ற பேச்சு தற்போது அதிமுகவில் தொடங்கிவிட்டது.தற்போது அமைச்சர்கள் வாய்க்கு வந்தார் போல பேசி வருகிறார்கள் ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை பேச மாட்டார்கள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட தலைவர்களாக இப்போது அதிமுகவினர் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணி பலத்தால் 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தல் வந்தால் அதிமுகவினரிடம் ஒற்றுமை இருக்காது.பதவி சுகம் இருக்கும் வரையும் அவர்களுக்கு வருமானம் இருக்கும் வரையும் ஒன்றாக இருப்பார்கள்தேர்தல் வந்தால் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் போல ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி விடுவார்கள் அதிமுக கூட்டணி நிச்சயம் நிலைக்காது முரண்பட்ட தலைமையாக அண்ணா திமுக தலைமை செயல்பட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் பழனியப்பன் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.