ETV Bharat / state

தனியாருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அமரர் ஊர்தி ஓட்டுநர்கள்: பொதுமக்கள் கண்டனம்! - ambulance problem in dharmapuri

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் அவசர ஊர்திக்கு ஆதரவாக செயல்படும் அரசு அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ambulance problem in dharmapuri
ambulance problem in dharmapuri
author img

By

Published : Oct 4, 2021, 12:33 PM IST

தர்மபுரி: கடத்தூர் அருகேயுள்ள தாளநத்தம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னதாக உயிரிழந்தார். அவரது உடற்கூராய்வு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை 2:45 மணியளவில் நடைபெற்றது.

தொடர்ந்து, உடற்கூராய்வு முடிந்து இரண்டு மணி நேரம் கடந்த பின்னும், அரசு சார்பில் இயக்கப்படும் அமரர் ஊர்தி வரத்தால் தனியார் அவசர ஊர்தி மூலம் அவரது உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றனர்.

தனியார் அவசர ஊர்திகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அமரர் ஊர்தி ஓட்டுநர்கள்

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த உயிரிழந்தவரின் உறவினர்கள், அரசு அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் தனியார் அவசர ஊர்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடமும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: செல்ஃபி மோகம் - நீர்வீழ்ச்சியிலிருந்து 140 அடி பள்ளத்தில் விழுந்தவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.