ETV Bharat / state

தர்மபுரியில் மொத்தமாக அள்ளிய அதிமுக கூட்டணி ! - தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தர்மபுரியில் மொத்தமாக அள்ளிய அதிமுக கூட்டணி !

author img

By

Published : May 4, 2021, 3:07 PM IST

தர்மபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அதிமுக கூட்டணியின் வசமாகியுள்ளது. பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.அன்பழகன் 29,035 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பி.கே.முருகனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், அரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சம்பத்குமார் 30,362 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் குமாரை வீழ்த்தி வென்றுள்ளார்.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜி.கே.மணி 22,358 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இன்பசேகரனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தசாமி 38,676 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பிரபுராஜசேகரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் 26,860 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியை சார்ந்தவர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.