ETV Bharat / state

விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆட்சியர்! - தருமபுரி

தருமபுரி: கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவரை மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்புத் துறை அலுவலரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

accident
author img

By

Published : Jul 17, 2019, 8:37 PM IST

Updated : Jul 20, 2019, 3:00 PM IST

தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்படும்போது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக தருமபுரியிலிருந்து காரிமங்கலம் நோக்கிச் சென்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர், விபத்து நடந்த பகுதிக்கு 108 அவசர ஊர்தி வருவதற்கு பத்து நிமிடம் காலதாமதம் ஆகும் என்பதை அறிந்து, படுகாயம் அடைந்தவரை மக்கள் தொடர்புத் துறை அலுவலர் வாகனத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.

உடனடியாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூவை தொடர்புகொண்டு படுகாயம் அடைந்தவருக்கு உயர் தரமான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டார்.

பின்னர், விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் ராஜூ (55) காரிமங்கலம் பள்ளத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மாது மாட்லாம்பட்டி அருகே உள்ள கெங்கு செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Intro:விபத்தில் சிக்கியவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி.... தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்படும்போது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஒருவர் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக தர்மபுரியில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்ற தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டார். விபத்து நடந்த பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு பத்து நிமிடம் காலதாமதம் ஆகும் என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தம்முடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பயணித்த ஜீப் வாகனத்தில் தலையில் பலத்த காயம் பட்டவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். உடனடியாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூயை தொடர்பு கொண்டு காயம் பட்டவருக்கு உயர் தரமான சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் மாது (55) காரிமங்கலம் பள்ளத்துக்கொட்டாய் பகுதியைச் சார்ந்தவர் என்றும் விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ராஜு மாட்லாம்பட்டி அருகே உள்ள கெங்கு செட்டிபட்டி கிராமத்தைச் சார்ந்தவர் என்றும் தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து மதிகோண் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Body:tn_dpi_01_accident_collector_recoverhelp_img_7204444Conclusion:விபத்தில் சிக்கியவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி.... தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்படும்போது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஒருவர் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக தர்மபுரியில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்ற தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டார். விபத்து நடந்த பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு பத்து நிமிடம் காலதாமதம் ஆகும் என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தம்முடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பயணித்த ஜீப் வாகனத்தில் தலையில் பலத்த காயம் பட்டவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். உடனடியாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூயை தொடர்பு கொண்டு காயம் பட்டவருக்கு உயர் தரமான சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் மாது (55) காரிமங்கலம் பள்ளத்துக்கொட்டாய் பகுதியைச் சார்ந்தவர் என்றும் விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ராஜு மாட்லாம்பட்டி அருகே உள்ள கெங்கு செட்டிபட்டி கிராமத்தைச் சார்ந்தவர் என்றும் தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து மதிகோண் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Last Updated : Jul 20, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.