நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் - Salem-chennai 8 lane Salem-Chennai eight-lane project
தருமபுரி: தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் காவல் நிலையத்திற்கு சென்றபோது அவரைக் காத்திருக்கவைத்து விடுவித்தனர்.
சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பழனியப்பன். இவர் கோம்பூா் பகுதியைச் சார்ந்தவர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மஞ்சவாடி ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பழனியப்பனை தாக்க முயன்றதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று (செப்.7) பழனியப்பன் சேலத்தைச் சார்ந்த விவசாயிகளுடன் மஞ்சவாடி ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நீதி கேட்க சென்றுள்ளனர்.
இவர்களிடம் காவல் துறையினர் மனுவை பெற்றுக்கொண்டு பழனியப்பனை மட்டும் காவல் நிலையத்தில் விசாரணைக்காக காலை முதல் மாலை வரை காத்திருக்க வைத்து இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.