ETV Bharat / state

நலிவுற்ற கிராமியக் கலைஞர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை - அமைச்சர் கே.பி. அன்பழகன் - higher education minister k.b anbalagan

தருமபுரி: நலிவுற்ற கிராமியக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

k.b anbalagan
k.b anbalagan
author img

By

Published : Sep 26, 2020, 10:13 PM IST

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் அனைத்து கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாரம்பரிய கிராமிய கலை விழா நிகழ்ச்சியை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.

பின்னர் நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், "நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மாநில அளவில் 37 மாவட்டங்களில் சுமார் 42 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தருமபுரியில் இரண்டாயிரத்து 499 பேர் பதிவு செய்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தகுதி படைத்த கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் இந்த நலவாரியங்களில் பதிவுசெய்வதில்லை. அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு முயற்சிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 906 நலிவுற்ற கலைஞர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம், 32 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், நலிவுற்ற கலைஞர்களுக்காக மாதந்தோறும் வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் தற்போது மூவாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமிய கலைஞர்கள் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினால் அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் வழங்கப்படும் குடும்பப் பராமரிப்பு நிதி ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக அரசு உயர்த்தப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது பெற்ற மூத்த கலைஞர்களுக்கு 25 ஆயிரம் மதிப்பிலான பண முடிப்பு வழங்கப்பட்டுவந்தது. இந்த ஆண்டு முதல் 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விருது கலைஞர்களுக்கு வழங்கப்படும் 3 சவரன் தங்கப்பதக்கம், தற்போது 5 சவரனாக அரசு உயர்த்தியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 78 குண்டுகள் முழங்க பாடும் நிலா பாலுவின் உடல் நல்லடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.