பாப்பிரெட்டிபட்டி: சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் அரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டி தண்ணீர் தொட்டி என்ற இடத்தில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில், பாப்பிரெட்டிப்பட்டி பட்டுக்கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பிரெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தக்காளி விலை சரிவு...விரக்தியில் ஆற்றில் கொட்டிச்சென்ற விவசாயிகள்