தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் பகுதியில் 15 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே மேல் பாட்ஷாபேட்டை பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனால், திருவிக நகர் , கோவிந்தசாமி நகரில் தொற்று ஏற்பட்டுள்ள பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், ஒரே இடத்தில் கூட்டம் கூடக்கூடாது என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இப்பகுதியில் 14 நாள்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியே யாரும் செல்லவேண்டாம் எனவும், இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடவும் அரூர் பேரூராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.