ETV Bharat / state

தர்மபுரியில் மதுபாட்டில்கள் கடத்திய 14 பேர் கைது - dharmapuri smuggling liquor

தர்மபுரி: பாலக்கோடு அருகே மதுபாட்டில்கள் கடத்திய 14 பேரை காரிமங்கலம் காவல் துறையினர் கைதுசெய்து ஆறு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

தர்மபுரியில் மதுபாட்டில்கள் கடத்திய 14 பேர் கைது

author img

By

Published : Jun 1, 2021, 12:43 PM IST

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லை வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து கார், இருசக்கர வாகனங்கள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தல் நடைபெறுவது அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், காரிமங்கலம் கும்பாரஅள்ளி பகுதிகளிலும், பாலக்கோடு பகுதியிலும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மதுபாட்டில்களைக் கடத்திய தர்மபுரியைச் சேர்ந்த சபரி (32), கருணாகரன் (30), வெங்கடேசன் (33),

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் (35), பசும்பொன்ராஜ் (35), இளங்கோ (47), முத்துக்குமார் (28), கார்த்திக் (28), கோகுல்நாத் (26),

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (23), விக்னேஷ் (27), சஞ்சீவன் (27) உள்ளிட்ட 14 பேரை காரிமங்கலம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஒரே நாளில் ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான 1,637 மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு கார், ஆறு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: பணியைப் புறக்கணித்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.