ETV Bharat / state

சாலையில் நடந்து சென்ற தாய், மகளிடம் அத்துமீறிய 2 இளைஞர்கள் கைது! - சாலையில் தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம்

கடலூர் மாவட்டத்தில் இரவில் சாலையில் தனியாக நடந்து சென்ற தாய், மகளிடம் அத்துமீறிய இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Jul 3, 2022, 7:20 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 35 வயது பெண்மணி, நேற்று(ஜூலை 2) இரவு எட்டு மணியளவில் தனது 12 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாமல் திடீரென இருசக்கர வாகனம் நடுவழியில் நின்றுள்ளது.

இதையடுத்து இருவரும் வாகனத்தை தள்ளிக்கொண்டு நடந்துசென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பண்ருட்டி கீழக்குப்பத்தை சேர்ந்த ஆதிகுரு (22), நடுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வகுமார்(27) ஆகியோர், அப்பெண்ணுடைய இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துச்சென்றனர்.

உடனே, அந்தப் பெண்மணி அவர்களை துரத்திச்சென்றார். அப்போது, அவரது சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அதைப் பார்த்து அப்பெண்மணியின் மகள் சத்தம் போடவே, சிறுமியிடமும் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். பிறகு இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், ஆதிகுரு, செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: மெரினாவில் போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.