கடலூர் மாவட்டம் அயன்குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் சிலம்பரசன் (30). இவர், கடந்த மே 1ஆம் தேதியன்று நெய்வேலி தில்லைநகர் TVC குடோன் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், சிலம்பரசனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
பின்னர், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி சிலம்பரசனிடமிருந்து 1000 ரூபாயை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் சிலம்பரசன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த கும்பலைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட சிங்காரவேலன் (24), அஸ்வின் (19), வினோத் ராம்பிரகாஷ் (24), தமிழரசன்(23) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், சிங்காரவேலன் என்பவர் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. எனவே இவரின் தொடர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சிங்காரவேலனை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார்.
இதையும் படிங்க: 'மாஞ்சா நூல் விவகாரத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டம்...!'