ETV Bharat / state

உறவுக்கு வற்புறுத்திய மருமகனை கொன்ற மாமியார் கைது - Crime News

வேப்பூர் அருகே கழுதூரில் உறவுக்கு வற்புறுத்திய மருமகனை கொன்று நாடகமாடிய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளைவு கொலையில் முடிந்தது
மாமியார், மருமகனுடன் கள்ளத்தொடர்பு
author img

By

Published : Nov 1, 2021, 12:13 PM IST

கடலூர்: வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவி செல்விக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி மலர்க்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியசாமி இறந்தநிலையில், பெரியாசாமியின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த வேல்முருகனுக்கும், முதல் மனைவிக்கு பிறந்த குமுதாவின் மகளான பவித்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த வேல்முருகன் கடந்த வருடம் மீண்டும், கழுதூர் வந்தவர் பெரியசாமியின் முதல் தாரத்தில் பிறந்த அக்காவின் சம்மதத்துடன், அவரது மகள் பவித்ராவை பெரம்பலூரில் கோயிலிற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

பவித்ரா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வளைகாப்புக்குப் பின், அவர் அம்மா வீட்டில் இருந்துள்ளார். கடந்த அக். 28 ஆம் தேதி, மாலை வேல்முருகன் தனது மனைவியை பார்த்து வருவதாக, தனது தாயிடம் கூறிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் வேல்முருகனின் தாயாருக்கு, தொலைப்பேசி வாயிலாக வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை வேப்பூர் மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கதறி அழுதனர்.

காவல்துறை வழக்கு பதிவு

பின்னர் வேல்முருகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அதனை மறைப்பதற்காக முகம் மற்றும் மார்ப்புப் பகுதியில் குங்குமத்தை பூசி உள்ளதாகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வேல்முருகனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையில், வேப்பூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கினர்.

உடற்கூறாய்வு தகவல்

உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆய்வில், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்துவிசாரணையை தீவிரப்படுத்தி வேப்பூர் காவல்துறை, முதலில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதா ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை செய்தனர்.

பெரும் அதிர்ச்சியில் காவல்துறை

இறந்தவரின் மாமியார் குமுதா அளித்த வாக்குமூலத்தில், மருமகன் வேல்முருகனுக்கும் தனக்கும் முன்பே உறவு இருந்ததாக தெரிவித்தார்.

சம்பவத்தன்று, வேல்முருகன் மது போதையில் வந்து கட்டாயப்படுத்தி உறவிற்கு அழைத்துள்ளார். அதற்கு வீட்டில் தனது மகள் பவித்ரா இருப்பதால் வேண்டாம் என்று மறுத்ததாகவும், ஆனாலும் மீறி மருமகன் வற்புறுத்தியதால் கீழேத் தள்ளி விட்டதாகவும் அப்பொழுது கழுத்தை பிடித்ததில் இறந்துவிட்டார் என்றார்.

திருமணமானதிற்கு பின்னும், வேல்முருகனுக்கும் அவரது மனைவியின் தாய், குமுதாவுக்கும் இடையே உறவு இருந்துள்ளதாக கூறிய அவர், இதை மறைப்பதற்காகவே, புடவையால் கழுத்தை இறுக்கி தூக்கில் மாட்டிவிட்டு இதை தற்கொலை போன்று நாடகமாடத் துவங்கினேன் என்றார்.

பின்னர் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த தன் மகளை எழுப்பி உன் கணவர் தூக்கு மாட்டிக் கொண்டார் என்று கூறி, தானும் மற்றவர்களுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

சிறையில் மாமியார் குமுதா

பின்னர், வேப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் பாபு, துணை ஆய்வாளர் சந்திரா ஆகியோர் மருமகனை கொலை செய்த மாமியார் குமுதாவை கைது செய்து, பின் விருதாச்சலம், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவர், கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வரைபடம் வெளியிடப்பட்ட நாளே 'தமிழ்நாடு தினம்' - செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.