ETV Bharat / state

'பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும்' - இன்றைய பெட்ரோல்

கடலூர்: பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

petrol
petrol
author img

By

Published : Feb 16, 2021, 11:07 PM IST

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாதவது, "சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக இந்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலந்து விநியோகிக்கின்றனர். வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும் மழை பெய்யும் போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் (டேங்) கசிந்துவிடாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி பத்திரிக்கையாளர் சந்திப்பு

பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீர் போதுமானது . இது வாகனத்தின் சேமிப்பு கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்கு சென்று தங்கி விடும். அதனால் வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும் அல்லது வாகனம் குலுங்கி செல்லக் கூடும். இது தொடர்பாக, பெட்ரோல் விற்பனையாளர்கள் தீவிர தரக்கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து பெட்ரோலினை விநியோகம் செய்து வருகின்றோம். ஆதலால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களின் சேமிப்பு கலன்களில் ( டேங்கில் ) சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு. வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையத்திலிருக்கும் பெட்போரல், டீசல் தரத்தை சரிபார்த்து கொள்ளலாம் . ஆனால் வாகனம் பெட்ரோல் விற்பனை நிலையத்தினை விட்டு வெளியேறிய பிறகு எங்களால் எந்த வித உத்தரவாதமும் அளிக்க முடியாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.