கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி சென்னைக்கு குடிநீர் அளிக்கும் பிரதான ஏரியாக உள்ளது. இதன் முழு நீர்த்தேக்க உயரம் 47.50 அடியாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீரானது கொள்ளிடம் வழியாக கடலூர் மாவட்ட எல்லைக்குள் வந்த வண்ணம் உள்ளது.
வடவாறு வழியாக 2200 கன அடி நீர் வீராணத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் தற்பொழுது அதன் உயரம் 42.20 அடியாக உள்ள வீராணம் ஏரி, அதன் முழுக்கொள்ளளவை சில தினங்களுக்குள் எட்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் தற்பொழுது சிதம்பரம் வழியாக பழையாறு வழியாகச்சென்று வங்கக்கடலில் கலந்துள்ளது. இதனால் சிதம்பரம் கொள்ளிடக் கரையோரம் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 57 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.
இதையும் படிங்க: கொள்ளிடத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை