ETV Bharat / state

’அண்ணாமலைக்கு விளம்பர மேனியா என்னும் நோய் உள்ளது...!’ - திருமாவளவன் - திருமா

அண்ணாமலைக்கு விளம்பர மேனியா என்னும் நோய் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

’அண்ணாமலைக்கு விளம்பரமேனிய எனும் நோய் உள்ளது...!’ - திருமாவளவன்

author img

By

Published : Nov 1, 2022, 9:38 AM IST

Updated : Nov 1, 2022, 10:14 AM IST

கடலூர்: கடலூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வருகை தந்தார்.

அப்போது தமிழ்நாடு வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது, “குஜராத்தில் மோபி என்னுமிடத்தில் தொங்குபாலம் இடிந்தது 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் மத்திய, மாநில அரசு இணைந்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற விபத்து நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது.

ஆளுநரே ஆர்.எஸ்.எஸ் தொண்டராக செயல்படுகின்றார். ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார். கோவையில் நடைபெற்ற விபத்தோ,அல்லது முபின் தொடர்பாக உளவுத்துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பேசி வருகின்றனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை எடுத்த விசாரிக்க வேண்டும்.

இச்செயலில் பாஜகவை கடுமையாக விசிக கண்டிக்கின்றது. தமிழக அரசு அலட்சியமாக இருந்து விட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது. அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது. அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும்.

மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. இந்தி திணிப்பு என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றி விட்டனர்.

70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர்.அதிகம் இந்தி உள்ள மாநிலங்களில் இம்முடிவு எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இதை திணிப்பதை ஏற்கமுடியாது. ஐனநாயகத்திற்கு எதிரானது. அவர்கள் மதவாத தேசியவாதிகள்” எனப் பேசினார்.

மேலும், “தமிழக மீனவர்கள் மீது தொடரச்சியாக தூப்பாக்கிசூடு நடத்தியதை கண்டித்தும் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மாநில உரிமை பறிப்பை எதிர்த்து நாளை(நவ.1) சென்னையில் விசிக சார்பில் சென்னையில் ஆர்பபாட்டம் நடைபெறும்" என்றார்.

இதையும் படிங்க: நடுரோட்டில் நடைபெற்ற காதல் திருமணம்..

Last Updated : Nov 1, 2022, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.