கடலூரில் ஆயுதப்படை மைதானத்தில்ஆயுதப் படை காவலர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கலந்துக்கொண்டு பயிற்சி வழங்கினார்.
பின்னர் பேசிய அவர்,"தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளதால், விதிகளை நன்றாக தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். தேர்தல் பணி காவல்துறையினரான நமக்குபாதுகாப்பு பணிகள் தேர்தலுக்கு முன், தேர்தலன்று, தேர்தலுக்கு பின் என 3 வகையான பாதுகாப்பு பணியையும் எவ்வித பிரச்னையின்றி சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தல் பணி காலத்தில் காவல் துறையால் எவ்வித பிரச்னை வராமல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். செல்போன் பயன்பாட்டைஅலுவலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்தல் பணி காலத்தில் தெரிந்தவர்கள், உறவினர்கள் என சலுகை காட்ட கூடாது" என்று கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பலர் பங்கேற்றனர்.