கடலூர்: புத்தாண்டை பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பொதுமக்கள் கொண்டாடினர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பிச்சாவரம் சுரப்பண்ணை காடுகளால் சூழ்ந்துள்ளது. சுரப்பண்ணை காடுகளில் பொதுமக்கள் படகுகள் சவாரி செய்து வனப்பகுதியின் எழில்மிகு தோற்றத்தினை கண்டுரசிக்கலாம்.
புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பிச்சாவரத்திற்கு வருகை புரிந்தனர். வனத்துறை மற்றும் சுற்றுலா துறை மூலம் அனுமதிக்கப்படும் படகுகளில், முறையான பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு சவாரி சென்று காடுகளை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.
அதிகமான கூட்டம் இருந்ததால் படகு சவாரி செல்ல சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: அ.தி.மு.க.வில் தொடர ஈ.பி.எஸ்.க்கு தகுதி இல்லை - வைத்திலிங்கம் காட்டம்!