ETV Bharat / state

சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவர்கள்

கடலூர்: கல்லூரி கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், அக்கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Rajah Muthiah Medical College students
மாணவர்கள்
author img

By

Published : Feb 4, 2021, 10:01 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உயர்கல்வித்துறை நிர்வகித்து வருகிறது. இருப்பினும் இங்கு அரசு கட்டணம் வசூலிக்கப்பட்டாமல், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து மாணவர்கள் காலவரையற்ற தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கிட்டத்தட்ட 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.4) அரசாணை ஒன்றினை வெளியிட்டார்.

அதில், ’சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்ட அரசு கல்லூரியாக இனி செயல்படும். இங்கு அரசு கட்டணங்களே இனி வசூலிக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தங்கள் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக் கூறி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதோடு தங்களது போராட்டங்களையும் விலக்கிக் கொண்டனர்.

பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவர்கள்

இது தொடர்பாக பேசிய மாணவர்கள்,’எங்களது போராட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மதிப்பளித்து இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். இனி அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார். இதை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் எங்களது போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்கிறோம். ஆதரவு அளித்த அனைத்து அமைப்பினர், கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.

இதையும் படிங்க:அரியர் தேர்வுகள் நடத்திய விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.