ETV Bharat / state

பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு! - Three Young girls drowned in panruti lake

கடலூர்: பண்ருட்டி அருகே கன்னி திருவிழாவின் போது, மூன்று இளம்பெண்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு  பண்ருட்டியில் ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு  3 இளம்பெண்கள் உயிரிழப்பு  Three Young girls drowned in lake  Three Young girls drowned in panruti lake  Three Young girls dead In panruti
Three Young girls drowned in panruti lake
author img

By

Published : Jan 27, 2021, 12:29 AM IST

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலின் போது கன்னி திருவிழா தொடங்கி 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் கன்னிதிருவிழா காணும் பொங்கலன்று தொடங்கியது. இதில், அதே ஊரை சேர்ந்த ஏழு கன்னிப்பெண்கள் கன்னி ஆடி வந்தனர்.

விழா 13 ஆவது நாளான இன்று(ஜன.26) பிற்பகலில் கன்னி திருவிழா நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, கன்னியாடிய ஏழு கன்னி பெண்களை அதே பகுதியில் உள்ள சித்தேரிக்கு அழைத்துச் சென்று கன்னி விடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, ஏரியில் தண்ணீரில் சாமியாடி இறங்கிய பெண்களில் நந்தினி (17), புவனேஸ்வரி (19), வினோதினி (18) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்ததும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: சீர்காழியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.