கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் அருகே ரேஸ் மில் தெருவைச் சேர்ந்தவர்கள் நாராயணன்(50), மாலா(40) தம்பதியினர். இவர்களது மகள் மகேஸ்வரி (21), தனது குழந்தைகள் யுவஸ்ரீ (3), தனுஸ்ரீ (1 1/2) ஆகியோருடன் பண்ருட்டியிலிருந்து தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு குடும்பத்தோடு வீட்டில் தூங்கிகொண்டு இருந்தபோது அப்பகுதியில் பெய்த மழையால் வீடு சேதம் அடைத்து சுவர் இடிந்து விழுந்தது.
இதில் மாலா, மகேஸ்வரி, குழந்தை தனுஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை மீட்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்த நாராயணன், வேல் முருகன் ஆகியோரும் நாராயணின் இன்னொரு மகள் ரஞ்சிதா (18), பேத்தி யுவஸ்ரீ ஆகிய ஐந்து பேரும் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை தனுஸ்ரீ மீது மின்சாரம் பாயந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
"இன்னொரு சுஜித் இறக்கமாட்டான்" - விவசாயிக்குள் ஒளிந்திருந்த விஞ்ஞானி